2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

14 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

14 வயதுச் சிறுமி ஒருவருடன்  குடும்பம் நடத்தியதாக கூறப்படும் 19 வயது இளைஞர் ஒருவரை கருவலகஸ்வௌ பொலிஸார் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.

புத்தளம், சிராம்பையடி பிரதேசத்திலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை நேசித்துவந்ததாகக் கூறப்படும் இந்த இளைஞர், கடந்த செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி சிறுமியை அழைத்துக்கொண்டு வந்து குடும்பம் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த சிறுமியை மீட்டுள்ளதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .