2025 மே 14, புதன்கிழமை

15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

15 வயதுச் சிறுமியொருவருடன் குடும்பம் நடத்தியதாகக் கூறப்படும் 22 வயதான இளைஞரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவை நின்தெனிய பிரசேத்திலேயே இவ்விளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

இவ்விடயம் தொடர்பில் இச்சிறுமியின் தாய் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இவ்விளைஞர் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இச்சிறுமியின் தாய் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற நிலையில், இச்சிறுமி பாட்டியாருடன் தங்கியிருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இச்சிறுமி அப்பிரதேசத்தைச் சேர்ந்த  இளைஞரொருவரை நேசித்து வந்த நிலையில், பாட்டிக்கு தெரியாமல் இச்சிறுமியை  இவ்விளைஞர் அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இவ்வேளையில், வெளிநாட்டிலிருந்து வந்த சிறுமியின் தாய் இவ்விடயம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து இவ்விளைஞர் கைதுசெய்யப்பட்டார்;.

இது  தொடர்பில் புத்தளம் பொலிஸார் விரிவான  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .