2025 மே 22, வியாழக்கிழமை

16 புதிய முத்திரைகள் வெளியீடு

Kogilavani   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)                   
நாட்டின் தேசிய உரிமைகள் மற்றும் சிறப்புகளை உணர்த்தும் வகையிலான 16 புதிய முத்திரைகள்  நேற்று வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளன.

அபயகிரி விகாரைக்கு அருகில் தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சர் ஜகத் பாலசூரிய, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் துமிந்த திஸாநாயக்கா ஆகியோரின் தலைமையில் இம்முத்திரைகள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

50 சதம் முதல் 75 ரூபா வரையான பெறுமதி கொண்ட முத்திரைகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. இம்முத்திரைகள் 5 வருட காலங்களுக்கு பழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தபால் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து இவ்வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X