2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

1755ஆம் ஆண்டுகால நாணயங்கள், தாழி கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2013 ஜூன் 10 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர


கற்பிட்டி, இலந்தையடி பிரதேசத்தில் 1755ஆம் ஆண்டு மற்றும் 1773ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதிக்குரிய  புராதன நாணயங்கள் மற்றும் புராதன காலத்தினது என நம்மப்படும் தாழி என்பன பிரதேச மீனவர்களினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினையடுத்து அங்கு தெரியவந்த சிவப்பு நிறத்திலான வலயத்தினை மீட்க முற்பட்ட போது அது புராதன கால தாழி என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மீனவர்கள் அதனை மீட்டு மீனவர் ஒருவரின் வீட்டில் வைத்துள்ளார்கள். இத்தாழியினை மீட்கும் போது அதனுள்ளிலிருந்து புராதன கால நாணயங்களும் மீனவர்களினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட புராதன பொருட்கள் தொடர்பில் கிராம சேவையாளரூடாக பிரதேச செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X