2025 மே 23, வெள்ளிக்கிழமை

இரு கைத்தொலைபேசிகளை விழுங்கிய புலிச் சந்தேகநபருக்கு சத்திரசிகிச்சை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 02 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கையடக்கத் தொலைபேசிகள் இரண்டை விழுங்கியதாகக் கூறப்படும் சிறைக்கைதி ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சம்பவமொன்று அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த புலிச் சந்தேகநபர் ஒருவரை வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றுக்காக அழைத்துச்சென்று மீண்டும் அநுராதபுரத்துக்கு அழைத்து வந்தபோதே மேற்படி கையடக்கத் தொலைபேசிகள் இரண்டையும் அவர் விழுங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்நிலையில், வயிற்றுக்குள்ளிருந்த கையடக்கத் தொலைபேசிகளில் ஒன்று அலறியபோது அவரது வயிற்றிலும் தொண்டைப் பகுதியிலும் வேதனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்படி சந்தேகநபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X