2025 மே 21, புதன்கிழமை

200 பக்கட் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Super User   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் நகரில் விற்பiனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட 200 பக்கட் ஹெரோயினுடன் நேற்று திங்கட்கிழமை இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர். புத்தளம், அனுராதபுர வீதியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய புத்தளம் நகரில் முச்சக்கர வண்டியொன்றினை பரிசோதனை செய்தபோதே 200 பக்கட் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பயணித்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டதாகவும்; பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் தடுத்து வைத்து விசாரனைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, புத்தளம் தில்லையடியில் ஓரு தொகை கஞ்சாவுடன் இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர்.

தில்லையடி பகுதியில் புத்தளம், குற்றப்புலணாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய புத்தளம் - கொழும்பு வீதியில் வேன் ஒன்றினை பரிசோதனை செய்த போது ஒரு தொகை கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பயணித்த வேனும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரனைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாகவும் விசாரனையின் பின்னர் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Tuesday, 02 April 2013 06:48 PM

    கஞ்ஜா புகை ஊரல்லாம் பகை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X