Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 13 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
புதையலில் தோண்டியெடுக்கப்பட்ட தங்கக்காசுகளெனக்கூறி போலி தங்கக்காசுகளை வழங்கி பௌத்த பிக்கொருவரை ஏமாற்றி ஒன்பது இலட்சம் ரூபா பண மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும்; சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பௌத்த பிக்குவும் அவரது தந்தையும் அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி ஜயசேன கூறினார்.
தலாவ பகுதியிலுள்ள இடமொன்றில் தங்கக்காசுகளைப் பெற்றுக்கொள்ள வருமாறு மேற்படி பௌத்த பிக்குவை சந்தேக நபர்கள் அழைத்துள்ளனர். இந்த நிலையில், மேற்படி பௌத்த பிக்கு தனது தந்தையை அழைத்துக்கொண்டு பதினொரு இலட்சம் ரூபா பணத்தையும் எடுத்துக்கொண்டு குறித்த இடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது 1,300 கிராம் தங்கக்காசுகளை சந்தேக நபர்களிடமிருந்து பெற்ற பௌத்த பிக்கு அவற்றினை பரிசோதித்துக்கொண்டிருந்தபோது சந்தேக நபர்களில் ஒருவர் எதிர்பாராதவிதமாக பௌத்த பிக்குவின் கையிலிருந்த பணத்தை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.
இவ்வாறு பறித்துக்கொண்டு ஓடும்போது இரண்டு இலட்சம் ரூபா பணம் தவறிக் கீழே வீழ்ந்ததாகவும் அப்பணத்தை மேற்படி பௌத்த பிக்கு எடுத்துக்கொண்டதாகவும் அவர்கள் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
hilmee Monday, 14 November 2011 06:26 AM
சும்மா கம்முன்னு போதி மரத்தடியில் கிடக்காமல் தங்க காசிக்கு ஆசைப்பட்டால் இப்படிதான் நடக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago