2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

பாடசாலை அலுவலகக் காரியாலயம் திறப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தின் எழுவன்குளம், அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட அதிபர் காரியாலய திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை நடைப்பெற்றது.

இதன்போது வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட அதிபர் காரியாலயத்தனை திறந்து வைத்தார்.

அதனையடுத்து 2012ஆம் வருடம் சாதனைகள் படைத்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் அவ் மாணவர்களினை வழிநடாத்திய ஆசிரியர்களுக்கும் கேடயங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இப் பாடசாலையில் கடந்த 3 வருடங்களாக தொடர்ச்சியாக 5ஆம் ஆண்டு புலமை பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதினை பாராட்டி வடமேல் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பாடசாலையின் அதிபருக்கு அனுப்பிய கடிதமும் இதன்போது வாசித்து காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண அமைச்சர் நவவி, வணாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X