2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தோணி கவிழ்ந்ததில் மூவர் பலி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

கலன்பிந்துனுவௌ, மானங்கட்டிய குளம் மற்றும் கஹட்டகஸ்திகிலிய யான் ஓயா ஆகியவற்றில் இரு தோணிகள் கவிழ்ந்ததில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மானங்கட்டிய குளத்தில் மேற்படி தோணியில் கடக்க முற்பட்ட இரு விவசாயிகளும் கஹட்டகஸ்திகிலிய யான் ஓயாவை கடக்க முற்பட்ட இராணுவ வீரர் ஓருவருமாக மூன்று பேரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

மானங்கட்டிய குளத்துக்கு மேற்பகுதியில் உள்ள தமது சேனையிலிருந்து வீடு நோக்கி தோணியொன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது தோணி கவிழ்ந்ததால் விவசாயிகள் இருவரும் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர். அதில் அதில் பயணித்த மேலும் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் மானங்கட்டிய கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான முனிதாச (வயது 58), ஒரு பிள்ளையின் தந்தையான தில்சான் ருவன் குமார (வயது 35) என்ற குடும்பஸ்தர்களே மரணமடைந்தவர்களாவர்.

இதேவேளை நொச்சியாகம லிந்தவௌ இராணுவ முகாமில் சேவையாற்றிய துமிந்த சில்வா என்ற இராணுவ வீரர் தமது மனைவி, பிள்ளைகளை பார்க்கச்சென்ற போது  மீமின்னாவல பகுதியில் யான் ஓயாவை கடக்க முற்பட்ட போது தோணி கவிழ்ந்து நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கலன்பிந்துனுவௌ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .