2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

முதலையை கொன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

புத்தளம், பாவத்தாமடு பகுதியில்  சுமார் 10 அடி நீளமான முதலையை கொன்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை கைது செய்துள்ளனர்.

பாவத்தாமடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் கண்ணிப் பொறி வைத்து முதலையை கொன்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்  நபரை இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கொல்லப்பட்ட முதலையானது சுமார் 100 கிலோகிராம் நிறைகொண்டது  என  தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X