2025 மே 22, வியாழக்கிழமை

வாகன விபத்துக்களை தடுக்க கெக்கிராவ பொலிஸினால் புதிய திட்டம்

Super User   / 2013 ஜனவரி 16 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வாகன விபத்துக்களை தடுப்பதற்காக கெக்கிராவ பொலிஸ் நிலையத்தினால் புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், சாரதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களை இதுதொடர்பாக தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது என கெக்கிராவ போக்குரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மாஷல் மஹீபால தெரிவித்தார்.

"15 - 20 வயதுக்குட்பட்டவர்களே அதிகளவில் திடீர் விபத்துக்களுக்கு உள்ளாவது பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. மோட்டார் வண்டிகளே அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றது.

அடுத்த இடத்தில் முச்சக்கர வண்டி உள்ளது. எனவே திடீர் விபத்துக்களை தடுத்து நிறுத்துவதற்காக இந்த புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X