2025 மே 22, வியாழக்கிழமை

கட்டிடம், அதிபர் காரியாயலம் திறந்துவைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 19 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் வட்டக்கண்டல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட கட்டிடம், அதிபர் காரியாலயம் என்பன நேற்று வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டன.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின்;; நிதி ஒதுக்கீட்டில் இக்கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், ஏ.எச்.எம். ரியாஸ், சட்டதரணி கமறுதீன், புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ், வணாத்தவில்லு பிரதேச சபைத்தலைவர் இந்திக சேனாதீர உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X