2025 மே 22, வியாழக்கிழமை

உடைந்து விழும் நிலையில் மஹவிலச்சிய பிரதேச செயலகம்

Super User   / 2013 ஜனவரி 21 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம், மஹவிலச்சிய பிரதேச செயலகத்தின் பிரதான கட்டிடம் உடைந்து விழும் நிலையிலுள்ளது என பிரதேச சபையின் செயலாளர் எம்.எஸ்.டீ.ஓ.ஜயதிலக்க தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் உட்பட 133 பேர் கடமையாற்றும் இந்த செயலகமானது மஹவிலச்சிய பிரதேசத்திலுள்ள பிரதான அரச நிறுவனமாகும் என அவர் குறிப்பிட்டார்.

"தற்போது பிரதான கட்டிடத்தின் கொங்கிரீட் கூரை  சேதமாகியுள்ளதோடு கம்பிகள் யாவும் துருப்பிடித்துள்ளன. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு  இக்கட்டிடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டமையினால் இரும்புப் பட்டங்கள் பொருத்தப்பட்டதாக" பிரதேச சபையின் செயலாளர் ஜயதிலக்க மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X