2025 மே 22, வியாழக்கிழமை

கடலில் தவறி வீழ்ந்து ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 22 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாடு பிரதேசத்தில் தெப்பமொன்றில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

பெரியபாடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கே.எஸ்.நிரோஷன் பெரேரா (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலத்தை இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இருவர் மீன்பிடிப்பதற்காக தெப்பமொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது தெப்பத்திலிருந்த இருவரில் ஒருவர் தவறிக் கடலில் வீழ்ந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாத நிலையில் மற்றையவர் தனது நண்பரைக் காப்பாற்ற முயற்சித்தபோதிலும், அவரைக் காப்பாற்ற முடியாதுபோன நிலையில் அவர் நீந்திக் கரைவந்து சேர்ந்தார்.

முந்தல் பொலிஸாரும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியும் சடலத்தை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம்  சிலாபம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X