2025 மே 22, வியாழக்கிழமை

'நாட்டிலுள்ள சகல பிரதேசங்களும் அபிவிருத்தி கண்டுள்ளன'

Kogilavani   / 2013 ஜனவரி 24 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்குள்ளாகியிருந்த கிராமங்கள் உட்பட நாட்டிலுள்ள சகல பிரதேசங்களும் கடந்த காலங்களில் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாடசாலைக் கல்வி மற்றும் விளையாட்டுத்துறையும் துரித அபிவிருத்தி கண்டுள்ளன. இதேவேளை தற்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் விளையாட்டுத்துறையை முன்னேற்றுவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு உபகரணங்களை வழங்குதல், பயிற்சி பாடநெறிகளை ஆரம்பித்தல், விளையாட்டுப் பயிற்சிகளை வழங்குதல் உட்பட பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X