2025 மே 22, வியாழக்கிழமை

காணிக்கான கேள்விகோரல் ரத்து

Kogilavani   / 2013 ஜனவரி 26 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமீரகம பிரதேசத்தில் வீடமைப்பு அதிகார சபையினால் கேள்வி கோரப்பட்டிருந்த காணியினை அமைச்சர் வீரவன்சவுடன் கதைத்து அக் காணிக்கான கேள்வி கோரலினை ரத்து செய்துள்ளதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா தெரித்ததார்.

சமீரகம பிரதேசத்தில் ஊருக்கோர் வேலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலர் பாடசாலையினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த காணி சமீரகம மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் காணியின் ஒரு பகுதியில் ஒரு தொழிற்சாலையினை அமைத்து சமீரகம மக்கள் தொழல்வாய்ப்பினை பெற்று தங்ககளது பொருளாதாரத்தினை அதிகரித்துக்கொள்ளலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா மேலும் தெரிவித்தார்.

சமீரகம கிராமத்தில் குறித்த காணியிற்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கேள்வி கோரப்பட்டதற்கு எதிரப்பு தெரிவித்து அண்;மையில் பிரதேச மக்கள் பலர் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டமொன்றினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

பாலர் பாடசாலையின் திறப்பு நிகழ்வின் போது மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன. பிரதேச உலமாக்கள், வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X