2025 ஜூலை 10, வியாழக்கிழமை

விபத்தில் பெண் பலி; வாகன சாரதி கைது

Kogilavani   / 2013 ஜனவரி 26 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் அழுத்கம பிரதான வீதியின் கல்பொத்தேகம பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வான விபத்தொன்றில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வண்டியொன்றின் சில்லில் சிக்குண்ட இப்பெண் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

ஆத்திரமடைந்த கிராம மக்கள் டிப்பர் வண்டிக்கு தீயிட்டுள்ளனர். பொலிஸாரின் தலையீட்டினால் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டபோதினிலும் பொலிஸாhருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து சென்ற பின்னர் இரவு 10 மணியின் பின்னர் மீண்டும் டிப்பர் வண்டிக்கு பிரதேச மக்கள் தீயிட்டுள்ளனர்.

டிப்பர் வண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .