2025 மே 22, வியாழக்கிழமை

விதவை பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற செயற்திட்டம்

Super User   / 2013 ஜனவரி 29 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கலென்பிந்துனுவௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள விதவை  பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற் கட்டமாக வட மத்திய மாகாண சபை உறுப்பினர் கல்யாணி கரளியத்த விதவை பெண்களுக்கு சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கினார்.

விவசாயத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களும் மிருக வளர்ப்பில் ஈடுபடும் பெண்களுக்கு கறவைப் பசுக்களும், தையல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0

  • Waseem Akram Tuesday, 29 January 2013 06:17 PM

    நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X