2025 மே 23, வெள்ளிக்கிழமை

அநுராதபுரத்தில் குறுந்தூர சேவை பஸ்கள் வேலைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்                          

அநுராதபுரம் நகரத்திலிருந்து குறுந்தூர சேவையில் ஈடுபடும் சகல பஸ் வண்டிகளும் நேற்று வியாழக்கிழமை முழுநாள் வேலைநிறுத்தத்தில்  ஈடுபட்டன.

அநுராதபுரம் நகரத்திலிருந்து விஜயபுர, பபுதுபுர, பண்டுளகம, நெலும்குளம், யஸசிரிபுர, 2ஆம் மைல்கல், 3ஆம் மைல்கல் பகுதி உட்பட பல பிரதேசங்களுக்குச் செல்லும் சுமார் 40 பஸ் வண்டிகளே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

குறுந்தூர சேவையில் ஈடுபடும் சகல பஸ் வண்டிகளுக்கும் நாளொன்றுக்கு 100 ரூபா வீதம் நேரக் கட்டுப்பாட்டாளர் அறவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக பஸ் வண்டிகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X