2025 மே 23, வெள்ளிக்கிழமை

முறையாகப் புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் அசௌகரியம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்                    

வடமத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு முறையாகப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படாமையால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள எந்தவொரு பாடசாலைக்கும் முழுமையாகப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதேவேளை, முதலாம் தரத்துக்கும் முறையாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

கல்வி அலுவலகங்களில் தேவையான ஊழியர்கள் இன்மை, தேவையான புதிய பாடப் புத்தகங்களின் தரவுகளை அதிபர் உரிய காலத்திற்கு வழங்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X