2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளம் பிரதேச தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாஸ் நடைமுறை

Kogilavani   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா, எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் பிரதேச தமிழ் ஊடகவியலாளர்கள் இலவசமாக தனியார் பஸ்களில் போக்குவரத்து செய்வதற்கு தேவையான பாஸ் நடைமுறையைப் பெற்றுக் கொடுப்பதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் தெரிவித்தார்.

புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தினருக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று மாலை புத்தளத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'மிகவும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் சமூக நலனுக்காக சேவையாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் நிச்சயமாக கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் நிறைவேற்றிக் கொடுப்பது எம்மைப் போன்ற அரசியல்வாதிகளின் கடமையாகும்.

எனவே புத்தளத்திலுள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்' என இதன்போது அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது புத்தளம் பிரதேசத்திலுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் மாகாண சபை உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X