2025 ஜூலை 09, புதன்கிழமை

பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட நாயக்கர்சேனை அரசினர் தழிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைப்பெற்றது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க மாகாண அமைச்சர் சனத் நிசாந்த 15 இலட்சம் ரூபா நிதியினை இக்கட்டிட நிர்மாணத்திற்காக ஒதுக்கியிருந்தார்.

பாடசாலையின் அதிபர் லில்லி ஜயசீலன் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் மாகாண சபை அமைச்சர் சனத் நிசாந்த மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், கல்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளர் நூஹ் லெப்பை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க வாசிகசாலைக்கான நிதியினை விரைவில் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .