2025 மே 23, வெள்ளிக்கிழமை

நெல்லைக் கொள்வனவு செய்ய சகல களஞ்சியசாலைகளும் திறப்பு

Super User   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்
                          
பெரும்போகத்தின் போது விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளுக்காக நாளை செவ்வாய்க்கிழமை முதல் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல களஞ்சியசாலைகளும் திறந்திருக்கும் என நெல் கொள்வனவு அதிகார சபையின் அநுராதபுரம் பிரதேச முகாமையாளர் பந்துல குமார தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் 20 மத்திய நிலையங்களிலுள்ள 34 களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதோடு 107,000 ஹெக்டயரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்தக்கூடிய சகல வசதிகளும் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறை சம்பா ஒரு கிலோ கிராமை 35 ரூபாவுக்கும் நாடு வகை நெல்லை 32 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு  மாவட்டங்களில் ஆறு மத்திய நிலையங்களிலுள்ள 10 களஞ்சியசாலைகள் ஊடாக நெல் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனவும் பிரதேச முகாமையாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X