2025 மே 22, வியாழக்கிழமை

நல்லாந்தழுவைக் கிராமத்தில் புதிய பாடசாலை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்,-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா, அப்துல்லாஹ்
முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லாந்தழுவைக் கிராமத்தில் புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட புதிய ஆரம்ப பாடசாலை ஒன்று  நேற்று  செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவே இவ்வாறு தனியாகப் பிரிக்கப்பட்டு புதிய ஆரம்ப பாடசாலையாக நல்லாந்தழுவை முஸ்லிம் கனிஷ்ட  வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் எண்டனி, வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, வடமேல் மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.ஏ.எஹியா, ஏ.எச்.எம்.றியாஸ், ஏ.எம்.கமறுதீன், என்.டி.எம்.தாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • asmil Thursday, 14 February 2013 09:29 AM

    அய்யோ. என்ன வராதவர்களின் பெயர்கள் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X