2025 மே 22, வியாழக்கிழமை

பெருமளவிலான வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக தெரிவிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் கட்டுத் துவக்குகளைப் பொருத்தி பெருமளவிலான வனவிலங்குகள் வேட்டையாடப்படுதவதாக ஹொரவப்பொத்தானை குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தர்மசிரி தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவப்பொத்தானை, கஹட்டகஸ்திகிலிய, கலெண்பிந்துனுவௌ, விலச்சிய பகுதிகளிலேயே அதிகளவில் மிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக 'ஹக்கபடஸ்' வகைகளை உபயோகித்து பன்றி, மான், மரை முதலான வன விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.

இதேவேளை கட்டுத் துவக்குகளைப் பொருத்துவதினால் அதிகளவிலான மனித உயிர்களும் பலியாவதோடு பலர் அங்கவீனமுற்றுமுள்ளனர்.
வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல், இறைச்சியை விற்பனை செய்வதோடு நகரப் பகுதியிலுள்ள உணவகங்களுக்கும் விற்பனை செய்தும் வருகின்றனர்.

எனவே இதனைத் தடுப்பதற்காக பொதுமக்கள் பொலிஸாhருக்குத் தகவல்களை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X