2025 மே 22, வியாழக்கிழமை

முஸ்லிம்களுடைய உறவு பலம் வாய்ந்தவை: வட மேல் மாகாண சபை தவிசாளர்

Super User   / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இ.அம்மார்

முஸ்லிம்களுடைய உறவு பலம் வாய்ந்தவை என வட மேல் மாகாண சபையின் தவிசாளர் ஆர்.டி.விமலதாச தெரிவித்தார்.

இதுபோன்று முஸ்லிம் நாடுகளுடைய உறவும் இலங்கைக்கு பக்கபலமாக இருந்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

குருநாகல், தல்கஸ்பிட்டிய அல் - அக்ஷா  மகா  வித்தியாலய  விளையாட்டு மைதானம் நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வட மேல் மாகாண சபையின் தவிசாளர்,

"கடந்த 30 வருட கால யுத்தின் போது இலங்கைக்கு பாகிஸ்தான் இராணுவ ரீதியாக பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது என்பதை மறக்க முடியாது. அதேபோல்  ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையில் இலங்கைக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகளே ஆதரவு வழங்கின.

அவற்றில் அமெரிக்காவின் மிக நேச நாடுகளான குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. குருநாகல் மாவட்டத்திலுள்ள சில பௌத்த விஹாரைகள் மற்றும் பௌத்த பிரிவினாவிற்கும் வெளிநாட்டு வெள்ளையர்கள் வந்து போவதாக கேள்விப்படக் கூடியதாக உள்ளது.

இதனால் தொன்று தொட்டு ஒற்றுமையாக வாழ்ந்த சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சூழ்ச்சிகளை மேற்கொண்டு நாட்டில் குழுப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. இதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் மரணிக்கும் தருணத்தில் எங்களுடைய எதிர்கால  சந்ததியினருக்கு நல்லது செய்துவிட்டு மரணிக்க வேண்டும். நாம் இந்த உலகில் வாழ்வது கொஞ்சக் காலம்.நம் பணிகள் காலம் பூரா வாழக் கூடியது. முஸ்லிம் சிறார்கள் விளையாடுவதற்காக தம் காணியை இந்தப் பாடசாலைக்கு இலவசமாக வழங்கியதன் ஊடாக அபேரத்னத ஏக்கநாயக காலம் பூராக எமது நெஞ்சில் நிறைந்த மனிதராக திகழப் போகின்றார்.

இது முஸ்லிம் மற்றும் சிங்கள உறவை மேலும் வலுப்படுத்தக் கூடிய செய்தியாகும். இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக இருந்து கொண்டிருக்கிறது. இந்தச் செய்தி தல்கஸ்பிட்டியவுக்கு மாத்திரமல்ல வட மேல் மாகாணத்திற்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் செல்ல வேண்டும்.

ஹலால் என்பது நல்ல விடயங்களையே சுட்டிக்காட்டி நிற்கிறது. இதனைக் கருத்திற் கொள்ளாமல் பிழையாக சித்தரித்துக் கொண்டு  நாட்டில் முரண்பாட்டை தோற்றிவித்துக் கொண்டிருக்கின்றது" என்றார்.

குருநாகல், இப்பாகமுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட தல்கஸ்பிட்டிய அல் - அக்ஷா  மஹா வித்தியாலயத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு தேவையான காணிகளை சிலர் நன்கொடை செய்துள்ளனர்.

அலவல வலவ்வே ஏக்கநாயக் முதியன்சிலாகே அபேரத்தன ஏக்கநாயக ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான அரை ஏக்கர் காணியை இலவசமாகவும் மற்றும் இன்னும் நான்கு பேர் சேர்ந்து அரை ஏக்கர் காணியையும் இந்த பாடசாலைக்கு நன்கொடை செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • Ashraff Friday, 15 February 2013 06:14 AM

    அலவல வலவ்வே ஏக்கநாயக் முதியன்சிலாகே அபேரத்தன ஏக்கநாயக மற்றும் ஏனைய நான்கு பேர் உட்பட இப்பணியினை சிறப்பாக முன்னெடுப்பதற்கு உருதுனையாய் இருந்த அனைவருக்கும் அத்துடன் வட மேல் மாகாண சபையின் தவிசாளர் ஆர்.டி.விமலதாச அவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முக்கியமாக மக்கள் தங்களுக்கிடையிலானா நட்புறவில் மற்றவர்களினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்ற பிளவுகளிலிருந்து தங்களைப் பாதுகத்துக்கொள்ள வேண்டும். இறைவா இத்த‌கய ந‌ல்லுள்ளம் கொண்ட மக்களின் ஆயுளிலும் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியை மென் மேலும் அதிகப்படுத்துவாயாக.

    Reply : 0       0

    MADURANKULI KURANKAR Monday, 18 February 2013 09:24 PM

    இந்த தவிசாளருக்கும் மற்ரும் காணிகளை வழங்கிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நானும் எனது மதுரங்குளீ காணியை பன்சலைக்கு அழிக்க போகிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X