2025 மே 22, வியாழக்கிழமை

முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

Super User   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இ.அம்மார்

முஸ்லிம்களுக்கு எதிராக வாரியப்பொலவில் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டப்பேரணி கைவிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாரியபொல அமைப்பாளரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ்.பீ நாவின்னவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டப்பேரணி கைவிடப்பட்டுள்ளது.

ஹலால் தொடர்பாக வாரியப்பொல நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை இன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இது குறித்து சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்எம். பௌசியியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவர் ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் வாரியப்பொல அமைப்பாளரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ். பீ. நாவின்னவுக்கு தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு அறிவித்தார்.

இதனையடுத்து வாரியப்பொல நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள், வாரியப்பொல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிங்கள வர்;த்தக சங்க உறுப்பினர்கள், வாரியப்பொல பிரதேச சபையின் தவிசாளர் ஆனந்த, வாரியப்பொல நகரிலுள்ள பிரதான விஹாரைகளின் விஹராதிபதிகள் உள்ளிட்ட பலரை அழைத்து சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன விசேட கடந்த சனிக்கிழமை கூட்டமொன்றை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் நாவின்ன,

"ஹலால் சம்மந்தமான பிரச்சினை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தோடு முடிந்து விட்டது. ஹலால் சான்றிதழ் வெளிநாட்டு ஏற்றுமதிக்காகவும் முஸ்லிம்களுடைய தூய உணவுப் பொருட்களாக அடையாளப்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்காக எதிராக செயற்படுவோர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடந்தையாகவுள்ள நான்கு வர்;த்தகர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான  மோசமான காரியங்களைச் செய்யத் தூண்டி முழு சிங்கள மக்களுக்கும் அவப்பேற்றை ஏற்படுத்திவிட வேண்டாம். இந்த வாரியப்பொல நகரில் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்குமானால் ஆர்ப்பாட்டம் நடத்துவோர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்" என்றார்.

அத்துடன், குருநாகல் மாவட்டப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சகல அதிகாரிகளுக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு நலன்குறித்து  நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.இதனை அடுத்து இந்தப் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தின்  தடை உத்தரவு கோரி விண்ணப்பிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடாபாக குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தாரும் சிரேஷ்ட அமைச்சருக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்தே குறித்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளி இடங்களிலிருந்து இரண்டு வாகனங்களில் வந்த குழுவினர் நாரமல்ல பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ள முயற்சித்தனர். எனினும் பாதுகாப்பு படையினரும் குறித்த பிரதேச மக்களும் பௌத்த மதகுமாரும் அனுமதிக்கவில்லை.

இதனால் துண்டுபிரசுரமொன்றை விநியோகித்துவிட்டு, ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தவர்களுக்கு ஏசிவிட்டு சென்றுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • khan Monday, 18 February 2013 06:42 AM

    ஏன் இந்த கொலவெறி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X