2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஒரு நாள் சிசு சடலமாக மீட்பு; நால்வர் கைது

Super User   / 2013 பெப்ரவரி 18 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

பிறந்து ஒரு நாள் சிசு சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் புத்தளம் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் தள வைத்தியசாலையில் இரத்த பெருக்கு அதிகரித்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்னொருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த  பெண்ணை வைத்தியர்கள் பரிசோதித்தபோது, குறித்த பெண் குழந்தை பெற்றுள்ளதினை அறிந்ததினையடுத்து சந்தேகமடைந்த வைத்தியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்னிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையினையடுத்து, அனுராதபுர வீதியிலுள்ள வீட்டின் கழிவறையிலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X