2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆனமடு பூனவிடிய வீதியை புனரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல்லாஹ்

 
ஆனமடு  பூனவிடிய வீதியின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடமாகியும் இதுவரையில் இந்த வீதிக்கான புனர்நிர்மாணப்  பணிகள் இடம்பெறவில்லை எனக் கூறி பொதுமக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனமடு பூனவிடிய வீதி கார்ப்பட் வீதியாக புனர்நிர்மாணம்  செய்வதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடமைப்பு மற்றும் நிர்மாணம், கடற்றொழில் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா ஒரு மாதத்திற்குள் இந்த வீதிக்கான புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்திலிருந்து கலைந்துசென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X