2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சத்தார் - பொதுபலசேனா இயக்க பிரதிநிதிகள் சந்திப்பு

Super User   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இ. அம்மார்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருணாகல் மாவட்ட அமைப்பாளரும் குருணாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தார் உள்ளிட்ட குழுவினர் பொதுபலசேனா இயக்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் பொதுபலசேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர், செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இணைப்பாளர் திலன்த கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொழும்பு – 5 இலுள்ள சம்புத்த ஜயந்தி கட்டிடத் தொகுதியிலுள்ள  தலைமையகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையில் முஸ்லிம்கள் இன்று முகங்கொடுத்துள்ள முக்கியமான பிரச்சனைகள் சம்பந்தமாக மிகவும் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

தமது இயக்கம் எந்த வகையிலும் இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என்பதில் உறுதியாக இருந்த பொது பலசேனா அமைப்பினர், பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுக்கு எழுந்த பிரச்சனைகளில் தாம் முன்னின்று இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குறிப்பிட்டனர்.

சுமார் இரண்டு மணத்தியாளஙகள் இடம்பெற்ற இந்த சந்திப்பு சமபந்தமாக அப்துல் சத்தார் கருத்துத் தெரிவிக்கையில்,

"இலங்கை இன்று முஸ்லிம் மக்கள் வாழும் அச்சமான நிலையிலிருந்து சுமூக நிலைக்கு கொண்டு வரலாம் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான நம்பிக்கையையும் சகவாழ்வையும் மீன்டும் உருவாக்குவதற்கு இந்த சந்திப்பு வழி வகுத்தது.

தொடர்ந்தும் இது சம்பந்தமான முயற்சிகளில் தான் மும்மரமாக ஈடுபடவுள்ளேன்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X