2025 மே 22, வியாழக்கிழமை

சிறுமி மீது வல்லுறவு: இளைஞன் கைது

Kanagaraj   / 2013 பெப்ரவரி 21 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருவலகஸ்வௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தப்போவ  3 ம் கொலணி எனும் பிரதேசத்தைச் இச்சிறுமியை அவளது வீட்டிலிருந்து அழைத்து வந்து புத்தளத்திலுள்ள தனது வீட்டில் வைத்தே சந்தேக நபர் இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரை கருவலகஸ்வௌ பொலிசார நேற்று புதன்கிழமை மாலை கைது செய்துள்ளதாக் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் கருவலகஸ்வௌ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து செயற்பட்ட பொலிசார் புத்தளம் பிட்டரவும் வீதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச் சாரதியான 26 வயது இளைஞரைக் கைது செய்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X