2025 மே 22, வியாழக்கிழமை

மின் விநியோகத்தால் அரசுக்கு நாளாந்தம் பல மில்லியன் நட்டம்: அமைச்சர் பவித்ரா

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 23 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


ஒரு அலகு மின்சார உற்பத்திக்கு சராசரியாக 23 ரூபா செலவு செய்யப்படுவதாகவும், ஆனால் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட வீடுகளுக்கு ஒரு அலகு 3 ரூபாவும் மேலும் 10 இலட்சம் வீடுகளுக்கு 4 ரூபாவும் இன்னும் 10 இலட்சம் வீடுகளுக்கு 5 ரூபா வீதமும் மக்களிடமிருந்து அறவிடப்படுகின்றது. இதனால் அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்படுவதாக மின் சக்தி அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி தெரிவித்தார்.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலிருந்து புத்தளம் களப்பு ஊடாக மின் கம்பிகள் ஏனைய பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

'நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஒரு அலகு மின் உற்பத்திக்கு 7ரூபா 50 சதம் செலவிடப்டுகிறது. தற்போது அனல் மின்சார நிலையத்திலிருந்து 300 கிலோ வோட் அலகுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் 2ஆம் மற்றும் 3ஆம் கட்டங்களினூடாக 600 கிலோ வோட் அலகுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் அனல் மின்சாரத்திலிருந்து களப்பு ஊடாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்வதினால் மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச அரசியல் தலைமைகள் அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதற்கமைய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய அரசியல் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகளை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது. இக்குழு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு நிலைமையினை ஆராய்வர் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அண்டனி, மாகாண அமைச்சர் சனத் நிசாந்த, மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.ரியாஸ், என்.டி.எம்.தாஹிர், புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ், புத்தளம் பிரதேச சபைத் தலைவர் திலுக் பத்திரன, கற்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எச்.மின்ஹாஜ், மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்ணான்டோ, அமைச்சு மற்றும் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதி நேரத்தில் புத்தளம் பிரதேச மீனவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டு அவர்களது பிரச்சினைகளினையும், கருத்துக்களினை தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0

  • vallarasu Saturday, 23 February 2013 04:19 PM

    அடுத்து மின் கட்டணம் அதிகரிக்கப்படும். இது எங்களுக்கு தெரியாதா..ஆ?

    Reply : 0       0

    vallarasu Sunday, 24 February 2013 05:01 AM

    என்ன.... அடுத்து மின் கட்டணம் அதிகரிக்கப்படும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X