2025 மே 22, வியாழக்கிழமை

புத்தளம் வர்த்தக சங்க தலைவர் மீது நகர பிதா தாக்குதல்

Super User   / 2013 பெப்ரவரி 24 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் புத்தளம்  வர்த்தக சங்கத்தின் தலைவர் ஹினாயதுல்லாஹ்வை தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டினை புத்தளம் வர்த்தக சங்க தலைவர் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீனின் இணைப்பாளரான அலிசப்றி தெரிவித்தார்.

புத்தளம் சந்தையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போதே நகர பிதா கே.ஏ.பாயிஸ் வர்த்தக சங்க தலைவரை தாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துகொண்டிருக்கும் போது நகரிலுள்ள நகை கடை உரிமையாளர் ஒருவர் கே.ஏ.பாயிஸ் ஆதரவாளரும் நகர சபை உறுப்பினருமான முஜயதுல்லாவினால் தாக்கப்பட்டுள்ளார் எனவும் அலிசப்றி தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என அலிசப்றி கூறினார். எனினும் தாக்குதலுக்குள்ளான இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக புத்தளம் வர்த்தக சங்க தலைவர் ஹினாயதுல்லாஹ்வை தொடர்புகொண்டு வினவியபோது,

"புத்தளத்தில் பல ஆண்டு காலமாக நடைமுறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சந்தை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால், வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகர சபையின் சாப்பு சட்டத்தின் ஊடாக நகர பிதா வர்த்தகர்களை பாதிப்படைய செய்துள்ளார்.

இதற்கு எதிராக கையொழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் நேற்று சனிக்கிழமை ஈடுபட்டிருந்தபோதே சந்தைக்கு வருகை வந்த பாயிஸ் கடுமையாக ஏசி வீட்டு என்னை தாக்கினார். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளிவிற்கு காயங்களில்லை" என்றார்.

இது தொடர்பாக புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸை பலமுறை தொடர்புகொண்டபோதும் அது பயனளிக்கவில்லை.

You May Also Like

  Comments - 0

  • MADURANKULIKURANKAAR Sunday, 24 February 2013 09:01 PM

    இவருக்கு இதே வேலையா போச்சு. அடுத்த முறை வீட்டில் உக்கார வேண்டியது தான்.

    Reply : 0       0

    MADURANKULIKURANKAAR Sunday, 24 February 2013 09:03 PM

    பட்டும் திருந்த மாட்டானுக.

    Reply : 0       0

    காவலன் Monday, 25 February 2013 01:36 PM

    ஒருமுறை தாதா அரசியல் செய்ததால் ஊர் மக்கள் இவரை ஒதுக்கி வைத்தனர், மன்னிப்பு கேட்டபின் திருந்தி விட்டார் என்று மறுபடியும் வாக்களித்தனர். மறுபடியும் அவர் அவரது தாதா வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார். திருந்த வேண்டியது அவரு இல்ல ஊர் மக்கள் தான். இதை சார்பாக பயன்படுத்திக்கொண்டு இவருக்கு எதிர் கட்சியினர் இன்னும் குளிர் காய்கிறார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X