2025 மே 22, வியாழக்கிழமை

வைத்தியர் மீதான அசிட் வீச்சு; விசாரணைக்காக விசேட பொலிஸ் குழு நியமனம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 25 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்தின் ஆயுர்வேத வைத்தியத்துறை ஆணையாளர், வைத்தியர் குமார அல்விஸ் மீதான அசிட் வீச்சு தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்காக விசேட பொலிஸ் குழுவை  வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிரிவர்தன நியமித்துள்ளார்.

அநுராதபுரம் கோட்டத்திற்குப் பொறுப்பான குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஐ.பீ. ரத்நாயக்க தலைமையிலான 10 பேரைக் கொண்ட பொலிஸ் குழு ஒன்று இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தின் ஆயுர்வேத வைத்தியத்துறை ஆணையாளர், வைத்தியர் குமார அல்விஸ் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரின் அசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X