2025 ஜூலை 09, புதன்கிழமை

விவசாயிகளுக்கு நீரிறைக்கும் இயந்திரங்கள் பகிர்ந்தளிப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -ஆகில் அஹமட்


குறைந்த வருமானம் பெறும் 250 விவசாயிகளுக்கு நீரிறைக்கும் இயந்திரங்களை வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் பகிர்ந்தளித்தார்.

வடமத்திய மாகாணத்தில் உப உணவுப் பயிர்ச்செய்கையை விருத்தி செய்யும் நோக்கில் இந்த நீரிறைக்கும் இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

95 ஆயிரம் ரூபா பெறுமதியான இந்த நீரிறைக்கும் இயந்திரம் ஒன்று  33,500 ரூபாவுக்கு வழங்கப்படுவதுடன், இந்தத் தொகையினை தவணைமுறையிலும் செலுத்துவதற்கான வசதி விவசாயிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .