2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

போயாதினத்தில் மதுபானம் விற்பனை செய்ய முற்பட்ட நால்வர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

போயாதினமான நேற்று திங்கட்கிழமை சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 4 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 90 போத்தல்கள் கொண்ட மதுபானத்தையும் கைப்பற்றியுள்ளனர். 

மாதம்பை, கல்முறுவ பல்லேகலே மற்றும் பட்டியகம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை  நடவடிக்கையின்போதே இவர்களை கைதுசெய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் பொலிஸார் கூறினர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X