2025 மே 22, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லவிருந்த எண்மர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்,-ஜூட் சமந்த

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச்  செல்ல இருந்ததாகக் கூறப்படும் 8 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

புத்தளம், கல்லடி மெகொட கிரலஓயா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இவர்கள் தங்கியிருந்தபோதே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள்; வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களே கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் அழைத்துச் செல்வதாகக் கூறி தங்களை அழைத்துவந்து வீடு ஒன்றில் தங்கவைத்தனர். அத்துடன்,  தங்களோடு மேலும் பலர் வந்தனர். இருப்பினும் அவர்கள் எங்கு தங்கியுள்ளனர் என்பது பற்றிய விபரம் தங்களுக்கு தெரியாது.

தங்களை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு சென்று விட்ட பின்னர் 4 இலட்சம் ரூபா வழங்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தங்களிடம் கோரியதாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் தங்களிடம்  கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .