2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

6 வயதுச் சிறுமியையும் அவரது தாயையும் தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  ஒருவரை மிஹிந்தலை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

குருன்தன்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கும் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கும் இடையில் இரகசியத் தொடர்பு இருந்ததாகவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபர் மேற்படி பெண்ணையும் அவரது இரண்டு பிள்ளைகளையும் தனது வீட்டில்  தங்கவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த 26ஆம் திகதி சந்தேக நபருக்கும் மேற்படி பெண்ணுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த சந்தேக நபர் இவர்களை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X