2025 மே 22, வியாழக்கிழமை

புத்தளம் விபத்தில் மூதாட்டி பலி

Kanagaraj   / 2013 பெப்ரவரி 28 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம் மும்தாஜ்

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புழுதிவயல் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில்  வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடையொன்றுக்கு பொருட்கள் வாங்கச் சென்ற சமயம் வீதியில் வந்த முச்சக்கர வண்டியொன்று மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் கச்சி மரைக்கார் நபிசா உம்மா என்ற 70 வயது வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துவராவார்.

விபத்தில் படுகாயங்களுக்குள்ளான இவர் உடனயடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளார். 

இவ்விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த புத்தளம் பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .