2025 மே 22, வியாழக்கிழமை

நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 01 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

புத்தளத்தில் உள்ள வான்குளத்தில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்;பட்ட சோல்டன் பிரதேசத்தில் வசித்துவருகின்ற முஹம்மது நஸ்ரின் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை தொழிலுக்குச் சென்று திரும்பிய  மேற்படி இளைஞர், வான்குளத்தில் நீராடியுள்ளார். இதன்போதே இவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .