2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புத்தளம் தள வைத்தியசாலையின் மனநல பிரிவு உட்பட பல பிரிவுகள் திறந்துவைப்பு

Kanagaraj   / 2013 மார்ச் 01 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் தள வைத்தியசாலையின் மனநல நோயாளர் பிரிவு, இயன் மருத்துவ பிரிவு, புதிய வெளி நோயாளர் பிரிவு என்பன வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

புத்தளம் தள வைத்தியசாலை அத்தியட்சகர் அசோக் பெரேரா தலைமையில் நடைப்பெற்ற இந் நிகழ்வில் புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ. பாயிஸ், ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான ஜெயிக்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள், வெளிநாட்டு வைத்திய குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வினையடுத்து வெளிநாட்டு வைத்தியர்களினை உள்ளடக்கிய தூதுக்குழுவினர் புத்தளம் தள வைத்தியசாலையினை சுற்றி மேற்பார்வை செய்ததுடன் வைத்தியசாலையின் நிர்வாக முறை, அதன் கட்டமைப்பு உள்ளடங்களாக பல்வேறு விடயங்களினையும் அவதானித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X