2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆயுர்வேத ஆணையாளர் மீதான அசிட் வீச்சு: வைத்தியர் உட்பட மூவர் கைது

Menaka Mookandi   / 2013 மார்ச் 01 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆகில் அஹமட்

வடமத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ் மீதான அசிட் வீச்சு தாக்குதலுடன் தொடர்புடைய ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் உட்பட்ட மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதி ஆயர்வேத வைத்தியசாலையில் ஆயர்வேத வைத்தியராக சேவையாற்றிய ஒருவருக்கும் அசிட் வீச்சு தாக்குதலுக்குள்ளான மாகாண ஆயுர்வேத ஆணையாளருக்கும் இடையே இருந்த பகையுணர்வே இத்தாக்குதல் சம்பவத்துக்கு மூல காரணம் என சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான வைத்தியரால் கூலிக்கு அமர்த்தப்பட்ட இருவராலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மின்னேரிய பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரும் நிட்டம்புவ பகுதி மீன் வியாபாரி ஒருவருமே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இவர்கள் இருவரும் கிரில்லவல பகுதியில் மோட்டார் சைக்கில் வாடகைக்கு கொடுக்கப்படும் இடமொன்றில் மோட்டார் சைக்கில் ஒன்றை வாடகைக்கு பெற்றுக்கொண்டு கடந்த 21ஆம் திகதி அநுராதபுரம் பகுதிக்கு வந்து சேர்ந்து 22ஆம் திகதி காலை வேளையில் வடமத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்கோள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளின் முடிவிலேயே மேற்படி சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் முடிவடைந்ததும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அநுராதபுரம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .