2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சுகாதார ஆணையாளர் மீதான அசிட் வீச்சு; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 மார்ச் 02 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆகில் அஹமட், எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாண சுகாதார ஆணையாளர் குமார அல்விஸ் மீதான அசிட் வீச்சு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவானும் மேலதிக மாவ ட்ட நீதிபதியுமாகிய சந்திம எதிரிமான்ன நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

சுசிரகுமார விக்கிரமசிங்க (ஆயுர்வேத வைத்தியர்), நுவன் குமார (இராணுவ வீரர்), டப்ளிவ்.ஏ.போசித்த (மீன் வியாபாரி) ஆகி யோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர்.

இச்சம்பவத்தின் பிர தான சந்தேக நபரான ஆயுர்வேத வைத்தியரிடமிருந்து 75,000 ரூபாவை முற்பணமாக பெற்றுக்கொண்டு ஒப்பந்த அடிப்படையிலேயே ஏனைய இ ருவரும் இக்குற்றத்தைச் செய்துள்ளனர் என்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொலிஸார் விளக்கமளித்தனர்.

சந்தேக நபர்களான நுவன் குமார,போசித்த ஆ கியோரை அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் இவர்கள் இருவர் பெயர்களிலுமுள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X