2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புத்தளம் நகர சபை ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 மார்ச் 02 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் நகர சபை ஊழியர்கள்  ஆர்ப்பாட்டமொன்றை இன்று சனிக்கிழமை மாலை முன்னெடுத்தனர்.

புத்தளம் நகர சபையின் சுயேட்சை குழு உறுப்பினரொருவரினால் நகர சபையின் ஊழியர் தாக்கப்பட்டதாக தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது.

தமக்கு நீதி கிடைக்கும் வரை பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுப்படவுள்ளதாக புத்தளம் நகர சபையின் பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

புத்தளம் நகர சபையின் வேளைத்தளத்தில் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி புத்தளம் பிரதான சுற்று வட்டம் வரை சென்று மீண்டும் பஸ் நிலையத்தினை வந்தடைந்து அங்கு தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

நகர சபை ஊழியரை தாக்கியவரை கைது செய்யுமாறும், நகர சபை ஊழியர்கள் மீது கை வைக்காதே என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் தாம் உரிய நடவடிக்கைகளினை மேற்கொள்வதாக உறுதியளித்ததினையடுத்து நகர சபை ஊழியர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

புத்தளம் நகர சபையின் சுயேட்சைக்குழு உறுப்பினர் எஹியா கான் குறித்த நகர சபை ஊழியரினை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X