2025 மே 22, வியாழக்கிழமை

புத்தளம் - மன்னார் வீதியில் போக்குவரத்தினை மேற்கொள்ள கடற் படையினர் அனுமதி

Super User   / 2013 மார்ச் 03 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

புத்தளம் - மன்னார் வீதியில் போக்குவரத்தினை மேற்கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளத்திலுள்ள குளங்கள் நீரில் முழ்கிக் காணப்பட்டன.

இதன்போது குறித்த குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்ட போது குளங்களில் இருந்து வெளியேறிய நீர் புத்தளம் எலுவன்குளம் ஊடாகப் பாய்ந்து சென்றது.

இவ்வாறு புத்தளம் எலுவன்குளம் ஊடாக நீர் பாய்ந்து சென்றதனால் புத்தளம் - மன்னார் வீதியூடான  போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததனால் அப்பாதையூடான போக்குவரத்துக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

எனினும் தற்போது நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில் புத்தளம் எலுவன்குளம் ஊடாக  மன்னார் வரைக்கும் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பயணிக்க முடியும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .