2025 மே 22, வியாழக்கிழமை

சிலாபத்தில் பாதிரியார் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 03 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

சிலாபத்தில் பாதிரியார் ஒருவர் இனந்தெரியாதோரினால் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம், அம்பகந்தவில கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியாரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சிலாபம், இரணவில வீதியில் வெலிஹேன பிரதேசத்திலேயே பாதிரியார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சிலாபத்திலிருந்து அம்பகந்தவில தேவாலயத்திற்கு தான் வானில் சென்றுகொண்டிருந்தபோது, வெலிஹேன பிரதேசத்தில் குழப்பம் ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில் தனது வாகனம் அந்த இடத்தை கடந்து செல்ல முற்பட்டபோது அங்கிருந்த ஒருவர் தனது வாகனத்தை தாக்கியுள்ளார்.

வாகனத்தை தாக்கியதை அடுத்து இது தொடர்பில் விசாரிப்பதற்காக தான் வாகனத்திலிருந்து இறங்கியபோது அங்கிருந்த ஒருவர் தன்னைத் தாக்கியுள்ளார்.

இதனை அவதானித்த அயலவர்கள், அந்த இடத்திற்கு வந்தபோது தன்னைத் தாக்கிய இருவரும் அந்த இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட இருவரும் அதிக மதுபோதையில் காணப்பட்டதாகவும் பாதிரியார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக சிலாபம் பொலிஸார் கூறினர்.

பாதிரியார் மீது தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும்  சந்தேக நபர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .