2025 மே 22, வியாழக்கிழமை

இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

Super User   / 2013 மார்ச் 03 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சீ.சபூர்தீன்


அநுராதபுரம், மத்திய நுவரகம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கா, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ  பிரதி அமைச்சர் டப்ளியூ.பீ.ஏக்கநாயக்கா, மத்திய நுவரகம் பிரதேச சபைத் தலைவர் ஜயசுந்தர உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இளைஞர் கழகங்களின் 2013ஆம் ஆண்டு நடப்பு வருடத்திற்கான நிருவாகத் தெரிவும் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .