2025 மே 22, வியாழக்கிழமை

கலைஞர்களுக்கு ஓய்வூதியம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 04 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுத் திட்டமொன்றை ஆரம்பிக்க கலாசாரத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கடவுள் பாதுகாப்பு (சுரக்கும்) என்ற பெயரில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

59 வயதிற்கு குறைந்த சகல கலைஞர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். 60 வயதிலிருந்து ஓய்வூதியம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக கலாசாரத் திணைக்களம் வருடாந்தம் 150 இலட்சம் ரூபா நிதியை செலவு செய்யவுள்ளது.

அனைத்துக் கலைஞர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என்பதோடு இதற்காக பிரதேச செயலகங்களில் விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .