2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'ஹலால்' பிரச்சினை ஏற்படுத்தும் விடயமல்ல: பிரதியமைச்சர்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 04 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

நாட்டில் ஹலால் தொடர்பாக ஒரு சிலர் புதிய பிரச்சினையொன்றைக் கொண்டு வந்துள்ளனர். ஹலால் உணவு வேண்டுமானால் சிங்களவர்கள் உண்ணலாம். விருப்பமில்லையென்றால் உண்ணாமல் விடலாம். அதில் பிரச்சினையை ஏற்படுத்தத் தேவையே இல்லை என நீர்ப்பாசன நீர்முகாமைத்துவ பிரதி அமைச்சர் டப்ளியூ.பீ.ஏக்கநாயக்க  தெரிவித்தார்.

உணவுப் பொதிகளில் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்டுள்ளமையானது இது ஹலாலா அல்லது ஹலால் இல்லையா என்பதை முஸ்லிம்கள் தெரிந்து கொள்வதற்கேயாகும். இதில் சிங்களவர்களாகிய நமக்கு எதுவித பிரச்சினையுமே இல்லை.

சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இக்கலவரம் ஒன்றைக் கொண்டு வரும் நோக்கில் ஒரு சிலர் செயற்படுகின்றனர். வெளிநாட்டு உதவியுடனேயே இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஹலால் எமது மூதாதையர் காலம் முதல் இருந்து வருகிறது. ஹலால் மூலம் அன்று அவர்களுக்கு ஏற்படாத பிரச்சினை இன்று நமக்கு மாத்திரம் எவ்வாறு ஏற்படும்? எனவே இது விடயத்தில் இளைஞர்களாகிய நாம் கவனமாகச் செயற்பட வேண்டும்.

30 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட யுத்தத்தால் நாம் அடைந்த துன்பங்கள் போதாதா? இன்னுமொரு இனக்கலவரம் நமக்குத் தேவைதானா? தீர்வு பெற வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கையில் வீணாக தேவையற்ற விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக்  கொள்ளக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .