2025 மே 21, புதன்கிழமை

பிரேஸில் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 06 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பிரேஸில் நாட்டுத் தயாரிப்பான த்ரீ எய்ட் கைத்துப்பாக்கி மற்றும் 5 ரவைகளுடன் ஒருவரை அநுராதபுரம் கைதுசெய்துள்ளனர்.

அநுராதபுரம் கல்பொத்தேகம கட்டுகம்பள பகுதியில் வைத்தே இவரை நேற்று செவ்வாய்க்கிழமை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இராணுவத்திலிருந்து தப்பிவந்ததாகக் கூறப்படும் இராணுவ வீரர் ஒருவர் கட்டுக்கம்பள பகுதியிலுள்ள நபர் ஒருவரின் வீட்டுக்கு வருகை தந்து அவருடன் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பிரயோகம் செய்வதற்கும் முயற்சித்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளவிடாது குறித்த நபர் தடுத்துடன் துப்பாக்கியை பறிப்பதற்கும் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது துப்பாக்கி கீழே விழ குறித்த நபரின் மனைவி அதனை எடுத்துக்கொண்டு இது தொடர்பில்  உடனடியாக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் அறிவித்துள்ளார்.  இந்நிலையில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரிடம் கைத்துப்பாக்கி மற்றும் ரவைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ விதானவின் ஆலோசனைப்படி குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .